செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எல்லா வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என பாஜக எல்லாம் நாடகம். திடீரென்று தேசியக்கொடியை வீடு முழுவதுமாக ஏற்றினார்கள், அவரே சொல்கிறார்… குடியரசு தின உரையில் பிரதமரே சொல்கிறார். வீடு இல்லாத எத்தனையோ லட்சக்கணக்கான மக்கள் இருக்கின்றார்கள் என்று… அவர்கள் எப்படி வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற முடியும் ? முதலில் வீட்டை கொடுங்கள், எங்களுக்கு சுதந்திரம் கொடுங்கள்.
அதற்குப் பிறகு சுதந்திரக் கொடியை கொடுக்கலாம். சுதந்திர கொடியை எப்படி பிடிப்பது என்று தெரியாத கட்சிக்காரர்கள் அமைச்சராக இருக்கிறார்கள் உங்கள் கட்சியில், எம்பி இருக்கின்றார்கள்… முதலில் சுதந்திர கொடியை பிடிப்பதற்கு உண்டான தகுதி ஆர்எஸ்எஸ், பிஜேபிக்கு இருக்கிறதா?வாருங்கள் ஒன்றாக விவாதிக்கலாம். என்னோடு விவாதிக்க யாரு வாறீங்க ?ஆர் எஸ் எஸ் லீடர், பிஜேபி தலைவர்கள், அதனுடைய பிரதிநிதிகள் யார் வேண்டுமானாலும் வரலாம்.சவர்க்கரை வீர சவர்க்கர் என்றால் வீரர் ஆகி விடுவாரா, அவர் கோளை சவர்க்கர், வீரன் என்றால் சுபாஷ் சந்திர போர் வீரன்,
பகத்சிங் வீரன், என் முன்னவர்கள் வீரர்கள் செக்கெழுத்தவர் வீரன், தூக்கில் தொங்கிய என் மூதாதையர்கள் வீரர்கள். உயிர் உள்ளவரை உங்கள் அரசுக்கு பிரிட்டிஷ்காரர்களுக்கு விசுவாசமான இருப்பேன் என்று எழுதிய கடிதம் இருக்கா ? இல்லையா? அவரை வீரர் என்று சொல்கிறீர்கள், எனக்கு பென்ஷன் கொடுங்கள் என்று பிரிட்டிஷ்காரர்களிடம் பென்ஷன் வாங்கிய பெருந்தகயர் வீரரா? இப்படித்தான் நீங்கள் காலம் காலமாக வரலாற்றை திரிச்சி, திரிச்சி, பொய்யாக போட்டுவது என்ன கொடுமை இதெல்லாம் ? என கேள்வி எழுப்பினார்.