பிக்பாஸ் பிரபலத்தின் திரைப்படத்தில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். இதை தொடர்ந்து சில சீரியல்களில் நடித்து வந்த கவின் ‘நட்புனா என்னனு தெரியுமா’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித் திரைக்கு அறிமுகமானார். அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற அவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் கவின் தற்போது வினீத் இயக்கத்தில் ‘லிப்ட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அமிர்தா நடித்துள்ளார். ஈகா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.கவின் படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.