தமன்னா அம்மன் வேடமிட்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் படிக்காதவன், அயன், தேவி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் தமன்னா, தற்போது அம்மன் வேடமிட்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், ‘வாழை இலையில் உணவு சாப்பிடும் போது என்னை நான் கடவுளாக உணர்கிறேன்’ எனவும் கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.