நடிகர் ரஜினிகாந்தை முன்னணி நடிகை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
நடிகை குஷ்பூ தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவருக்கு கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர். 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது தயாரிப்பு நிர்வாகத்தையும் மற்றொரு பக்கம் தேசிய கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தையும் தொடர்ந்து வருகிறார்.
இதனையடுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் இவர் மிக நெருக்கமான நட்பு பாராட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதன்படி, தர்மத்தின் தலைவன் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான அண்ணாத்த படம் வரை இவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகை குஷ்பூ சூப்பர் ஸ்டாரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துள்ளார். இவருடன் சிரித்துப் பேசி ஒரு கோப்பை தேநீர் பருகிய சந்தோஷமான சந்திப்பு என குஷ்பூ குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.