முன்னணி நடிகை பூஜா ஹெக்டே, எந்த கதாநாயகிகளும் நடித்திராத கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பதாக கூறியுள்ளார்.
தமிழ்சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தற்போது தளபதி65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
அதன்படி இவர் தற்போது தெலுங்கில் பிரபாஸ்க்கு ஜோடியாக ராதே ஷ்யாம் என்ற திரைப்படத்திலும் அகில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் என்ற திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே எந்த கதாநாயகிகளும் நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் அவர் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியராக நடித்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.