நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில் 9_ஆவது சுற்றில் பின்னடைவை சந்தித்துள்ளது.
காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது.
இதில் அதிமுகவின் கூட்டணியில் விக்கிரவாண்டியில் முத்தமிழ் செல்வனும் , நாங்குநேரியில் நாராயணனும் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர்.திமுக தலைமையிலான கூட்டணியின் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனும் , விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். அதே போல நாம் தமிழர் கட்சியும் தங்களது வேட்பாளரை அறிவித்தத்து.
21_ஆம் தேதி பதிவாகிய வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதில் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வந்தனர்.அதிமுக வேட்பாளர் நாராயணன் முன்னிலை வகித்த நிலையில் 9_ஆவது சுற்றில் மட்டும் காங்கிராஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் முன்னிலை பெற்றுள்ளார். 9_ஆவது சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு 4,594 வாக்குகளும் , அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு 3,161 வாக்குகள் கிடைத்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் தொடர்ந்து 8 சுற்றுகளில் முன்னிலையில் இருந்த அதிமுக 9_ஆவது சுற்றில் அது மாறியுள்ளது.
நாங்குநேரி தொகுதியில்
நாராயணன் ( அதிமுக ) : 47,247
ரூபி மனோகரன் ( காங்கிரஸ் ) : 32,366
ராஜ நாராயணன் ( நாம் தமிழர் ) : 7,66
அதிமுக VS திமுக வித்தியாசம் : 1,124