Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதல்கட்ட வாக்குபதிவில் வேட்பாளர்களாக களம்கண்ட முக்கிய தலைவர்கள்….!!

நேற்று நடைபெற்ற முதல் கட்ட வாக்குபதிவில் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் மீண்டும் வேட்பாளர்களாக களமிறங்கினர்.

இந்தியாவின் மிக பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகின்றது. இதையடுத்து கடந்த 1 மாத காலமாக தேர்தல் நடத்தை விதிகளை அமுல்படுத்தி தேர்தல் நடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டது தேர்தல் ஆணையம். இந்நிலையில் முதல் கட்ட வாக்குபதிவாக 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு தொடங்கியது.

பல்வேறு தொகுதிகளில் மீண்டும் வேட்பாளர்களாக களமிறங்கிய அமைச்சர்களும் , சில அரசியல் தலைவர்களும் போட்டியிட்ட தொகுதியிலும் நேற்று வாக்குபதிவு நடைபெற்றது. அந்த வகையில் ,

மத்திய அமைச்சர்கள் :

நிதின் கட்காரி நாக்பூர் தொகுதி – மராட்டியம் மாநிலம் ,

ஹன்ஸ்ராஜ் ஆஹிர் சந்திராப்பூர் தொகுதி மராட்டியம் மாநிலம் ,

வி.கே.சிங் காசியாபாத்  நாடாளுமன்ற தொகுதி – உத்தரபிரதேச மாநிலம் ,

மகேஷ் சர்மா கவுதம்புத்தநகர் பாராளுமன்ற தொகுதி –  உத்தரபிரதேச மாநிலம் ,

சத்யபால்சிங் (பாக்பத் நாடாளுமன்ற தொகுதி – உத்தரபிரதேச மாநிலம் ,

கிரண் ரிஜூஜூ (அருணாசல பிரதேசம் மேற்கு நாடாளுமன்ற தொகுதியில் முக்கிய வேட்பாளர்களாக பாரதீய ஜனதா கட்சியின் சார்பில்  களமிறங்கினர்.

மேலும் ,

காங்கிரஸ் கட்சியின் ஹரிஷ் ராவத் நைனிடால் நாடாளுமன்ற தொகுதி – உத்தரகாண்ட்மாநிலம் ,

ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் ஒவைசி ஐதராபாத் நாடாளுமன்ற தொகுதி- தெலுங்கானா மாநிலம் ,

தெலுங்கு தேசம் கட்சியின் அசோக் கஜபதி ராஜூ விஜயநகரம் நாடாளுமன்ற தொகுதி – ஆந்திரா மாநிலம் ஆகியோரும் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

Categories

Tech |