Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியின் முக்கிய சீரியல் நடிகைகள்…. ஒன்றாக இணைந்து ஒரே சீரியலில் கொண்டாட்டம்…!!!

விஜய் டிவியின் முக்கிய சீரியல் நடிகைகள் பலர் ஒரே சீரியலில் இணைந்துள்ளனர்.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.அந்தவகையில் கடந்த இரண்டு வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ஈரமான ரோஜாவே. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் பவித்ரா ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளார்.

இந்நிலையில் இந்த சீரியலில் பவித்ராவிற்கு தற்போது சீமந்தம் நடந்து வருகிறது. இந்த விழாவிற்காக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன், வேலைக்காரன் மற்றும் அன்புடன் குஷி ஆகிய சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வருபவர்கள் ஒன்றாக இணைந்து பங்கேற்றுள்ளனர். இதனால் அடுத்து வரும் எபிசோடுகளைகாண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |