Categories
அரசியல் மாநில செய்திகள்

தீடிரென கசிந்த தகவல்…! நகரவே விடாத போலீஸ்…. ஷாக் ஆன சீமான்…, மதுரையில் பரபரப்பு ..!!

பழம்பெருமை வாய்ந்த விக்டோரியா எட்வார்ட் மன்றம் என்பது ஒரு பொது சொத்து. உள்ளே மக்கள் படித்து பயன்பெற நூலகம், திரையரங்கு, அரங்க கூட்டம் நடத்துவதற்கான அரங்கு இதெல்லாம் இருக்கிறது, இதெல்லாம் ஒரு பொதுச்சொத்து. அதுபோக இங்கே பல வணிக நிறுவனங்கள் கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது

ஒரு நாள் திடீர்னு நான் மட்டும் யாருக்கும் சொல்லாமல் உள்ளே சென்று பார்த்தால் என்ன செய்வீர்கள்? அடிக்கடி மதுரைக்கு வருவேன். வரும்போது இன்றைக்கு சுவரொட்டி ஓட்டிவிட்டார் நான் பார்க்க போகிறேன் என்று செய்தி கசிந்து விட்டது அதனால் தடுக்கிறீர்கள். ஒருத்தருக்கும் தெரியாமல் நான் உள்ளே வந்து பார்வையிட்டால் என்ன செய்ய முடியும்?  அரசு தலையீடனும்  நீண்ட காலமாக இருக்கின்ற பிரச்சனை. இங்கிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்கள் போராடி அவர்களால் ஒன்று செய்ய இயலவில்லை, எந்த அரசியல் கட்சியும் தலையிட்டு, ஒரு நியாயமான தீர்வு காண்பதற்கு தயாராக இல்லை

ஆனால் நாங்கள் இதை விடுவதாக இல்லை, ஏதாவது ஒரு முடிவு வரவேண்டும், ஒரு நியாயமான தேர்வு வர வேண்டும், என்ன நடக்கிறது என்றாவது சொல்ல வேண்டும். இன்றைக்கு இந்த இடத்தில் தடுத்து நிறுத்த வேண்டிய தேவை என்ன வருது. அதிகாரிகளிடம் கேட்டால் மேலதிகாரி கமிஷனர் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள். கமிஷனர் உத்தரவு போட்டு இதற்குள் நுழையக்கூடாது என்று தடுக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது.

நூலகம் தானே இருக்கிறது, அரங்குதானே இருக்கிறது அதை பார்வையிடக்கூடாது என்று சொல்வதற்கு,  யாருடைய நிர்வாகத்தின் கீழ் வேண்டுமானாலும் இருக்கட்டும். தனிப்பட்ட ஒருவரின் நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் கூட யாருமே செல்லக் கூடாது,  பார்க்கக்கூடாது  என்று எப்படி சொல்ல முடியும். இதனால் அரசு தலையிட வேண்டும் இல்லை என்றால் மறுபடியும் இது குறித்து நாங்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை வரும் என தெரிவித்தார்.

Categories

Tech |