Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாய்ந்த நிலையில் உள்ள கம்பங்கள்… அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

நீண்ட நாட்களாக சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் போகலூரை அடுத்துள்ள சத்திரக்குடியை சுற்றிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் சத்திரக்குடி ரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பகள் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் மின் விநியோகம் செய்யபடுகின்றது. அந்த மின்கம்பங்கள் அனைத்தும் நீண்ட நாட்களாக சாய்ந்த நிலையில் உள்ளது. இதனை சரிசெய்யும்படி பொதுமக்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனையடுத்து அந்த மின்கம்பங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அருகில் உள்ளத்தால் அங்கு வரும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். மேலும் மின்கம்பங்களால் பெரும் அபாயம் இருப்பதால் அதனை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |