விவசாயிகளுக்கு ஆதரவு தரும் வகையில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ நவ்ஜோத் சிங் தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றியுள்ளார்.
டெல்லியில் 40 விவசாய சங்கங்கள் சேர்ந்து மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆறு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதை குறிக்கும் விதமாக இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் அனைத்தும் தங்களது வீட்டில் கருப்பு கொடியை ஏற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ வும் , முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த அவர் “விவசாய சமுதாயத்தை முழுமையாக அழிக்கும் மூன்று சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் போராடி வருகிறது. அந்த போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் நான் எனது வீட்டில் கொடி ஏற்றியுள்ளேன். பஞ்சாப் மக்கள் ஒவ்வொருவரும் விவசாயிகளை ஆதரிக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.