Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியைப் போல் ஆட்டங்களை முடிக்க கற்றுக் கொள்ளவேண்டும்: ஆஸி. துணை கேப்டன்!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனியைப் போல் ஆட்டங்களை வெற்றிகரமாக முடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதன் முதல் போட்டி வரும் 14ஆம் தேதி மும்பை வான்கடேவில் தொடங்கவுள்ளது.

Image result for Learn to finish games like Dhoni: Aussie. Vice Captain!

இதற்காக அந்த அணியின் துணை கேப்டன் அலெக்ஸ் கேரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ஒருநாள் போட்டிகளை வெற்றிகரமாக முடிப்பதற்கு எம்.எஸ்.தோனியைப் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும். அவரைப் போல் ஆட்டங்களைக் கடைசிவரை கொண்டு சென்று முடிக்கவேண்டும். எனது ஆட்டத்தில் சிறு சிறு முன்னேற்றங்களை செய்துவருகிறேன்.

Image result for Learn to finish games like Dhoni: Aussie. Vice Captain!

எதிர்காலத்தில் நான் ஆஸ்திரேலிய அணிக்காக ஐந்து அல்லது ஏழாவது இடத்தில் களமிறங்குவேன் என நினைக்கிறேன். அதனால் எனது ஆட்டம் நேரத்திற்கு தகுந்தாற்போல் இருக்கும். பிக் பாஷ் லீக்கில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக நான்காவது இடத்தில் களமிறங்கி சிறப்பாக ஆடியது, எனது ஆட்டத்தை நான் புரிந்துகொள்ள மிகவும் பயன்பட்டது” எனத் தெரிவித்தார். இந்திய அணிக்காக நட்சத்திர வீரர் தோனி இதுவரை கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த 50 போட்டிகளில் 47இல் வெற்றியைத் தேடி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |