சுவிட்சர்லாந்தில் உள்ள வலாய்ஸ் என்ற மண்டலம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் குறைந்த வருமானத்தில் வாழ்வதற்கு ஏற்ற இடம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது.
சுவிட்சர்லாந்தின் லவாய்ஸ் மண்டலம், தொழிற்சாலைகள், மருந்து நிறுவனங்கள் மற்றும் கைக்கடிகார தயாரிப்பு போன்றவற்றில் முதன்மையாக விளங்குகிறது. வெளிநாட்டுப் பணியாளர்கள் அதிக சம்பளம் மற்றும் இயற்கை நிலப்பரப்பிற்காக சுவிட்சர்லாந்தை அதிகமாக விரும்புகின்றனர்.
ஆனால் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மற்றும் பணியாற்றும் பிற நாட்டவர்கள் அங்கு வாழும் மக்களுடன் இணைந்து அன்றாட வாழ்க்கையை வாழ்வது கடினமாக இருப்பதாகவே கூறுகின்றனர். இந்நிலையில் தற்போதைய ஆய்வில் வலாய்ஸ் மண்டலம், குடும்பத்தினருடன் வாழ்வதற்கு சிறந்த பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் சுவிட்சர்லாந்தின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் இருக்கும் சில மண்டலங்களில் மக்கள் தங்கள் குழந்தைகளுடனோ அல்லது தனியாகவோ குறைந்த வருமானத்தில் வாழலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வலாய்ஸ் மண்டலம் குழந்தைகளுடன் உள்ள குடும்பத்தினருக்கு தகுந்த வாழ்க்கை சூழலை கொண்டுள்ளது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.