விலங்குகளிலுள்ள தோல்களின் மூலம் பல்வேறு வகையான பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் தோல்ப் பொருட்களின் பயன்கள் அதிகரித்து வருகிறது. ஆடு, மாடு, பாம்பு, நெருப்புக்கோழி, மான் ஆகியவற்றின் தோல்களை பயன்படுத்தி அழகான பைகள், கைப்பைகள், கடிகாரப்பட்டைகள், மெல்லிய தோலினால் ஆன உடைகள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
தோலை சுத்தப்படுத்தும் முறை
முதலாவதாக விலங்குகளிலிருந்து கிடைக்கும் தோலில் உள்ள மயிர், அழுக்கு உள்ளிட்டவை நீக்கப்பட்டு செம்மையான பச்சைத்தோல் கிடைக்கிறது. அதன்பின் தோல் முறையாக பதினிடப்படும். பின் அதில் இருந்து பல்வேறு வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் விலங்குகளின் தோல்களில் இருந்து தயாரிக்கப்படும் லெதர் பெல்ட் பற்றி நாம் காண்போம். அதாவது விலங்குகளின் தோலை கசாப் கடையில் இருந்து தொழிற்சாலைக்கு கொள்முதல் செய்கிறார்கள்.
இதையடுத்து அந்த தோலில் இருக்கக்கூடிய முடி, அழுக்கு உள்ளிட்டவற்றை சுத்தம் செய்வார்கள். அவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட தோலை எடுத்து சோடியம் சல்பேட் எனும் அமிலத்தில் ஊற வைப்பார்கள். பின் பெல்ட் செய்வதற்கு எந்த மாதிரியான கலர் தேவையோ அதற்கு ஏற்றவாறு அமிலத்தை சேர்க்கிறார்கள். அடுத்ததாக பெல்ட்டுக்கு தேவையான சைசை டெக்னிகள் மூலம் வெட்டி எடுக்கிறார்கள். அதனை தொடந்து தயாரான பெல்ட்டை ஊழியர்களை வைத்து சரிபார்த்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.