Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உடனே எங்களுக்கு கால் பண்ணுங்க…. கண்டிப்பா லீவ் குடுக்கணும்…. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை…!!

தேர்தலுக்காக விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் மலர்கொடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் இருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றில் வேலை பார்க்கும் தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி போன்ற அனைத்து பணியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து கட்டுமான தொழில் போன்ற  அனைத்து அமைப்பு சாரா தொழில் துறையினர் தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து விடுமுறை அளித்த நாளுக்கான ஊதியத்தை பணியின் தன்மைக்கு ஏற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமலும், சாதாரண தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியத்தை சரியாகவும் வழங்கவேண்டும் என கூறியுள்ளார். அதன்படி மேற்கூறிய கட்டுப்பாடுகளை மீறும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையரின் அமலாக்கம் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் நாளை மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்த புகார்களை அமலாக்கம் மலர்கொடி9789723245, உதவி ஆய்வாளர் செந்தில்குமார் 9894257543 போன்றோருக்கு தொடர்புகொண்டு தெரிவிக்குமாறும், விதிமுறைகளை மீறி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |