ஐஎன்எஸ் மீடியா வழக்கில் ஜாமீன் வழங்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐஎன்எஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நேற்றையதினம் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இருந்தாலும் தற்போது அவரால் வெளியே வரமுடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. ஏனென்றால் இதே வழக்கில் அமலாக்கத்துறை அவரை கடந்த வாரம் திகார் சிறையில் நேரடியாகச் சென்று கைது செய்தது. இதையடுத்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிதம்பரத்தை 7 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குஹார் உத்தரவு பிறப்பித்தார்.
இதனடிப்படையில் தற்போது இன்றைய தினம் ஆறாவது நாளாக அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்தி வருகிறனர் . நாளை சிதம்பரத்தை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஆஜர் படுத்த உள்ள நிலையில் தற்போது இந்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகியுள்ள பா.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரத்தின் சார்பில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் இதே வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டதை குறிப்பிட்டு தற்போது ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.