Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு ”மருத்துவ செலவு ஏற்படும்” பிள்ளைகளை விட்டு பிடியுங்கள் ..!!

கன்னி ராசி அன்பர்களே..!! பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணையும் நாளாக இருக்கும். முன்பின் அறிமுகம் இல்லாதவர் கூட உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுப்பார்கள். ஆடை ஆபரண பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். இன்று குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் , குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது சிறப்பு. பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நன்மையை கொடுக்கும்.

கலைத் துறையினருக்கு சம்பள பாக்கி கைக்கு வரும். வீண் பேச்சுக்களையும் , இரவு நேரப் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. அது போலவே சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். கனவு தொல்லைகளும் கொஞ்சம் இருக்கும். சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இன்று பயணங்களில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். சக மனிதனிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். இன்று சக ஊழியர்களிடம் பழகும் பொழுது கவனமாக பேசுங்கள். பிரச்சினைகளை எந்த விதத்திலும் தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம். அதை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் செயல்படுங்கள்.

இன்று குடும்பத்திற்காக நீங்கள் முக்கிய பொருட்களை வாங்க கூடும். தேவையான பொருட்களை மட்டும் வாங்குங்கள் அது போதும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கொஞ்சம் கடுமையாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  வடக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |