Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நீரோடையயும் விட்டு வைக்கல… அதிகாரிகளை கண்டு ஓட முயற்சி… வசமாக சிக்கிய 3 பேர்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 3 பேரை கைது செய்த நிலையில் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் மணல் கடத்தலை தடுப்பதற்கு காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வாலாந்தரவை கிராம நிர்வாக அலுவலர் அனுராஜ் தலைமையில் வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து ஏந்தல் சுடுகாடு பகுதியில் உள்ள நீரோடையில் சிலர் நீரோடையை சேதப்படுத்தி மணல் அள்ளிக்கொண்டிருந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து வருவாய் துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் மணல் அள்ளியவர்கள் ரெகுநாதபுரம் காளியம்மாள் நகரை சேர்ந்த நம்புராஜ்(21), ராஜ்குமார்(24), பிரகாஷ்(40) விஜயகுமார் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர்களை பிடிக்க முயன்றபோது விஜயகுமார் தப்பியோடிய நிலையில் 3 பேரையும் பிடித்து வருவாய்த்துறையினர் கேணிக்கரை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் அவர்களை கைது செய்த போலீசார் மணல் அள்ள பயன்படுத்திய 2 டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து தப்பியோடிய விஜய்குமாரையும் தேடி வருகின்றனர்.

Categories

Tech |