ராமநாதபுரத்தில் கோவில் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதிக்கு உட்பட்ட மட்டியரேந்தல் கிராமத்தில் வேணுகோபால கிருஷ்ணன் கோவில் உள்ளது. தற்போது கொரோனா காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அதனால் கோவிலுக்கு வெளியே பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வெண்கல உண்டியல் ஒன்று கோவிலுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆள்நடமாட்டம் இல்லாதபோது அப்பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாரதா தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.