செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நான் கூடுதலாக பட்ஜெட் பணம் வைத்துள்ளேன். ஒரு லட்சம் கோடி கையில் இருக்கிறது. நான் யாருக்கு வேண்டுமானாலும் இலவசம் கொடுக்கிறேன் என்பது பிரச்சனை இல்லை. அடுத்த தேர்தல் நடக்கட்டும், ஒரு கட்சி ( அதிமுக ) அவர்களுடைய இலவசத்தை பற்றி சொல்லட்டும், இதையெல்லாம் இலவசமாக கொடுக்கப் போகிறோம் என்று சொல்லட்டும், அதற்கான நேரம் வரும்போது…
ஏனென்றால் இதைப் பற்றி கருத்து சொல்வது மாநில தலைவராக சரியா இருக்காது. இலவசங்களால் பல இடங்களில் நம்முடைய நாடு அழிந்து கொண்டிருக்கிறது என்பது நிதர்சனமான ஒரு உண்மை. அது ஜனநாயக தண்டவாளத்திலிருந்து ட்ரைன்னை ஒரு சைடுல திருப்பி விட்டுட்டாங்க, ஆனால் அந்த கட்சியுடன் ( அதிமுகவுடன்) நீங்கள் கூட்டணி வைப்பீர்களா?
இலவசத்தை மட்டும் மையமாக ஒரு கட்சி சொல்கிறது. ஏனென்றால் அதற்கு ஒரு கட்சியின் மீது நான் பழி போட விரும்பவில்லை, இப்போது அந்த கட்சியை ( அதிமுகவை ) கூப்பிட்டு கேட்டால் அவர்கள், வேறு மாதிரி விவாதிப்பார்கள், ஜனநாயகத்தில் வேறு மாதிரி சொல்லலாம், நீங்கள் எப்படி இலவசம் என்று சொல்வீர்கள் . மக்கள் மன்றத்தில் நாம் வாதம் வைக்கிறோம்.
இதெல்லாம் மக்கள் மன்றத்தில் வைக்கக்கூடிய வாதங்கள். பாரதிய ஜனதா கட்சி ஒரு வாதம் வைக்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் திமுக ஒரு வாதம் வைக்கிறது. இதை மக்கள் உணர்ந்து, எந்த வாதம் சரியான வாதம் என்பதை புரிந்து கொள்வார்கள் என்பது எங்களுடைய நம்பிக்கை. அதற்கும் திமுக சொல்கிறார்கள்… இதோ பாருங்கள் இலவசம் கொடுத்திருக்கும், இதெல்லாம் நடந்திருக்கிறது என்று திமுக சொல்கிறார்கள். ஆனால் பாரதிய ஜனதா கட்சியும் நாம் கொடுப்பதை இலவசம் என்று சொல்லவில்லை, மக்களின் உரிமை என்று சொல்கிறோம். மக்களுடைய உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.