Categories
சினிமா தமிழ் சினிமா

“அவங்களை விட்டுடுங்க!”…. தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து… லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்…!!!

தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்து கொண்ட சம்பவம் அவர்களது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரஜினி ரசிகர்களும் தங்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தனுஷ், ஐஸ்வர்யாவின்  இந்த முடிவை அறிந்த ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் “அம்மா லட்சுமி ராமகிருஷ்ணன் இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா. ரெண்டு பேரையும் கூட்டிகிட்டு போய் சேர்த்து வையுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், அவர்கள் மரியாதையான முறையில் பிரிகின்றனர். அவர்களை விட்டுவிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |