பிரான்ஸ் நாட்டிலிருந்து ஈரானுக்கு சென்றுள்ள யாராக இருந்தாலும் காரணம் இல்லாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் பிரான்ஸ் தங்களுடைய குடிமக்களை உடனடியாக ஈரானில் இருந்து வெளியேறி தங்கள் நாட்டுக்கு திரும்புமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும் இரட்டை குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும் கூட கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் அபாயம் ஈரானில் அதிக அளவில் நிலவி வருகின்றது.
அதுமட்டுமில்லாமல் நியாயமான விசாரணையும் அந்நாட்டில் எதிர்பார்க்க முடியவில்லை என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தனது கருத்தை தெரிவித்துள்ளது. இதனையடுத்து பிரான்ஸ் குடிமக்கள் இரண்டு பேரை ஈரான் பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இதனால் ஈரான் சர்வாதிகார செயல்முறைகளை கடைபிடிப்பதாக பிரான்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.