Categories
உலக செய்திகள்

லெபனான் வெடி விபத்து…. மணமகளை எடுத்த வீடியோவில் பதிவான பதறவைக்கும் காட்சி….!!

பெய்ரூட்டில் மணப்பெண்ணை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு ஏற்பட்ட வெடிவிபத்தும் அதில் பதிவாகியுள்ளது.

லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து அந்த நாட்டையே பெருமளவு பாதித்துள்ளது. அதில் 100க்கும் மேலானோர் உயிரிழந்த நிலையில் நிலையில் 4 ஆயிரத்துக்கும் மேலானோர் காயம் அடைந்துள்ளனர்.இந்த வெடி விபத்து ஏற்பட்டபோது அந்தப் பகுதியில் ஒரு திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. மணப்பெண்ணை உள்ளூர் புகைப்படக்காரர்கள் படம் பிடித்துக் கொண்டிருந்த போது பெய்ரூட் வெடிவிபத்து நிகழ்ந்ததால் அந்த வீடியோ அதில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.மேலும் நல்ல வேளையாக மணப்பெண்ணும் மணமகனும் காயங்கள் இன்றி உயிர் தப்பி உள்ளதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.

பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் மூன்று லட்சத்திற்கும் மேலான மக்கள் வீடுகளை இழந்து இருக்கின்றனர். இரண்டாவது மிகப்பெரிய தானியக் கிடங்கு இந்த வெடிவிபத்தில் முழுவதுமாக சேதமடைந்தது. அதனால் 15 ஆயிரம் டன் தானியங்கள் எரிந்து போனதால், நகர மக்களுக்காக இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டுமே உணவு தானியங்கள் இருக்கின்றன. இந்த விபத்து காரணமாக அந்த நகரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன. அதனால் இந்த விபத்தில் காயமடைந்த நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாத நிலைக்கு ஆளாகி உள்ளனர். மேலும் நகரில் இருக்கின்ற உணவகங்கள் மற்றும் தூதரகங்கள் அனைத்தும் வெடிவிபத்தில் பெரும் சேதமடைந்துள்ளன.

Categories

Tech |