தமிழக தேர்தல் களத்தில் மூன்றாவது அணியை உருவாக்க தேமுதிகவில் மட்டும் தான் முடியும் . அதை கடந்த தேர்தலிலே நிரூபித்துக் காட்டி இருக்கின்றோம். தேமுதிக மூன்றாவது அணி அமைக்க எந்த தடையும் கிடையாது. இந்த தேர்தலில் கூட தேசிய முற்போக்கு திராவிட கழகம் நினைத்தால் மூன்றாவது அணியை கண்டிப்பாக அமைக்கும். எங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கு. இந்த தேர்தலில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இருக்கு என விஜயகாந்தின் மகன் விஜயப்ரபாகரன் தெரிவித்தார்.
மேலும் திமுக – அதிமுகவுக்கு மாற்று மூன்றாவது கட்சியாக தேமுதிக மட்டும் உள்ளது எனவும் அவர் கூறினார். கடந்த மக்களவை தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த நிலையில் தேமுதிக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தற்போது மூன்றாவது அணி அமையும் என தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் விஜயபிரபாகரன் இந்த கருத்து தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமல்லாமல் அதிமுக கூட்டணிக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.