இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்திற்கு வந்த சரக்கு ரயிலில் துண்டிக்கப்பட்ட ஆணின் கால் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை துறைமுகத்திற்கு இரும்பு கம்பிகளை ஏற்றுக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று சேலம் மாவட்டத்தில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் துறைமுக ஊழியர்கள் இந்த சரக்கு ரயிலில் இருந்த இரும்பு கம்பிகளை இறக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இரும்பு கம்பிகளுக்கு நடுவில் துண்டிக்கப்பட்ட ஆணின் கால் கிடப்பதை பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாகப் துறைமுக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துறைமுகம் காவல்துறையினர் துண்டிக்கப்பட்ட ஆணின் காலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் துண்டிக்கப்பட்ட அந்த கால் யாருடையது என்றும், விபத்தில் சிக்கி பலியாகி விட்டாரா அல்லது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.