பாகிஸ்தான் நாட்டின் மூத்த ராணுவ அதிகாரி மீது அவதூறாக குற்றம் சாட்டிய காரணத்தால் இம்ரான் கான் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ராணுவம் வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், அரசாங்கத்தை எதிர்த்து குற்றம் சாட்டி வருகிறார். அதனோடு தொடர்ந்து மிகப்பெரிய பேரணிகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார். அதன்படி வாஜிராபாத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று அரசாங்கத்திற்கு எதிராக பேரணி நடத்தப்பட்ட போது மர்ம நபர் ஒருவர் அவரை சுட்டார்.
இதில், காலில் அவருக்கு குண்டு பாய்ந்தது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர் அங்கிருந்து கொண்டு நாட்டு மக்களிடம் பேசியதாவது, இந்த தாக்குதல் நடத்துவதற்கு முந்தைய நாள் அன்று என்னை கொல்வதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று தெரிந்து விட்டது.
வெளியே செல்லாதீர்கள் என்று எனக்கு அறிவுறுத்தினார்கள். பிரதமர் ஷபாஷ் செரீப், உள்துறை தலைவராக இருக்கும் பைசல், உளவுத்துறையில் மந்திரியாக சனுல்லா போன்றோர் தான் இந்த தாக்குதலுக்கு பின் உள்ளார்கள். நாட்டை காக்குமாறு ராணுவ தளபதியையும் தலைமை நீதிபதியையும் கேட்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் நாட்டின் ராணுவமானது, மூத்த ராணுவ அதிகாரியை இவ்வாறு குற்றம் சாட்டுவதாக கூறி முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறது.