லெஜெண்ட் சரவணா அருள் ஹீரோவாக நடித்து வரும் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது கடையின் விளம்பரங்களில் பல ஹீரோயின்களுடன் நடித்து பிரபலமடைந்தவர் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள். தற்போது இவர் உல்லாசம் , விசில் போன்ற படங்களை இயக்கிய ஜேடி , ஜெர்ரி இயக்கத்தில் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரோபோ சங்கர் ,பிரபு,நாசர் ,தம்பி ராமய்யா , விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இவர் ஹிந்தியில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.