பழம்பெரும் நடிகை சாவித்திரி லுக்கில் இருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் டிஆர்பி யிலும் முன்னணி வகிக்கிறது. குறிப்பாக இந்த சீரியலில் இடம்பெற்றுள்ள கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் லுக்கில் போட்டோ ஷூட் நிகழ்த்தியுள்ளார். இந்த பழைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்கள் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/BjPnt3mAXzE/?utm_medium=copy_link