வெந்நீருடன் தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பது பற்றிய தொகுப்பு
இதனை சாப்பிடுவதால் அப்படி என்னதான் நன்மை இருக்கும் என சந்தேகம் பலருக்கும் இருக்கும்.
- இந்த பானத்தை நாளின் முதல் திரவ உணவாக எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.
- எலுமிச்சையில் நார்சத்து உள்ளது. அது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு கலோரிகளின் அளவைக் குறைத்து உடல் எடையை குறைக்கவும் உதவும்.
- அடிக்கடி வயிற்று பிரச்சனை ஏற்பட்டால் இந்த பானத்தை குடிப்பதன் மூலம் வயிற்றில் ஏற்படும் பல பிரச்சனைகளை தடுக்க முடியும்.
- உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகப்படுத்தி நோயின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு கொடுக்கும்.
- இதனை ஒரு மாத காலம் அருந்திவந்தால் அடிக்கடி சளி பிடிப்பதில் இருந்து விடுபடலாம்.
- உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.
- காலையில் உடற்பயிற்சி செய்யும் பொழுது வெளிவரும் வியர்வையின் மூலம் உடலில் இருந்து சோடியம் வெளிவரும். அவ்வாறு வெளியேறும் சோடியத்தை இந்த பானம் பூர்த்திசெய்யும்.
- மாதவிடாய் பிரச்சனைகள் ஒழுங்காக இந்த பானம் உதவிபுரிகிறது.
தயாரிக்கும் முறை
ஒரு டம்ளர் நீரை ஏற்ற பதத்தில் சூடாக்கி எடுத்துக்கொண்டு ஒரு கிண்ணத்தில் அரை மூடி எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ள வேண்டும். தேன் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பானம் தயார்.
இதனை அருந்திய பின்னர் குறைந்தது ஒருமணி நேரத்திற்கு மற்றும் பானங்களை அருந்தாமல் இருப்பது நல்லது.