Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கேரட் எலுமிச்சை சாதம் – செய்முறை

இதுவரை சாப்பிடாத சுவைமிக்க கேரட் எலுமிச்சை சாதம்.

 

தேவையான பொருட்கள்

சாதம்                                     –  இரண்டு கிண்ணம்

பச்சைமிளகாய்                 –    4

கேரட்                                     –    2

எலுமிச்சை பழம்              –     2

எண்ணெய்                           –   தேவையான அளவு

மஞ்சள் தூள்                       –   அரை சிட்டிகை

உப்பு                                        –   தேவையான  அளவு

கடுகு, கடலைப்பருப்பு    –  சிறிதளவு

 

செய்முறை

  • முதலில் கேரட்டை தோலை நீக்கி துருவி வைத்துக் கொள்ளவும்.

 

  • எலுமிச்சை சாரை நன்றாக பிழிந்து அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து வைக்கவும்.

 

  • அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு போட்டு வெடித்தவுடன்  நறுக்கிய பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.

 

  • பின்னர் தோல் நீக்கி துருவி வைத்துள்ள கேரட்டை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 2 நிமிடங்கள் காத்திருக்கவும்.

 

  • அதனுடன் எலுமிச்சை சாறை சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு போட்டு கொதிக்க விடவும்.

 

  • மஞ்சள் வாசம் போனவுடன் அதனை எடுத்து சாதத்தில் ஊற்றி நன்றாக கலந்து விடவும்.

 

  • சுமார் அரை மணி நேரம் சாதத்தை அந்த கலவையில் ஊற வைக்கவும்.

 

  • இப்பொது சுவைமிக்க கேரட் எலுமிச்சை சாதம் ரெடி

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |