சளி இருமல் காய்ச்சல் மூன்றையும் கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒரு நோய் என்றால் அது கொரோனா வைரஸ் தான். இந்த இக்கட்டான சூழ்நிலையில், நம்முடைய உறவினர்களை நம் வீட்டிற்கு அழைக்க மறுக்கிறோம். அவர்களும் வர மறுக்கிறார்கள். காரணம் நோய் தொற்று எளிதாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனிடம் பரவுகிறது என்பதற்காகத்தான். சொந்த வீட்டுக்குள்ளேயே சாதாரணமாக இருமினாலோ, தும்மினாலோ ஒருவித அச்சத்துடன் பார்க்கிறார்கள்.
இந்த சளி காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து விரிவாக காணலாம். வைட்டமின் சி சத்தானது சளி, காய்ச்சலை குணப்படுத்த உதவுகிறது. குறிப்பாக நுரையீரலை பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்றவை வைட்டமின் சி நிறைந்த பழங்கள். நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து இரண்டு மூன்று முறை தினமும் குடித்தால் வைட்டமின் சி சத்து உடலுக்கு கிடைக்கும்.