Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

இது உடலுக்கு இவ்வளவு நல்லதா…!!

நாரத்தை இலை ரசம்

தேவையான பொருட்கள் :

நாரத்தை இலை-2 கப்

துவரம் பருப்பு-5 ஸ்பு ன்

தக்காளி-2

கடுகு -அரை ஸ்பு ன்

சீரகம்- 1 ஸ்பு ன்

மிளகு- 1 ஸ்பு ன்

வர மிளகாய்- 4

புளி- நெல்லிக்காய் அளவு

பெருங்காயத்தூள்- 1 ஸ்பு ன்

கொத்தமல்லி -2 ஸ்பு ன்

எண்ணெய்- தேவையானஅளவு

உப்பு- தேவையானஅளவு

Image result for நாரத்தை இலை ரசம்

செய்முறை :

நாரத்தை இலை ரசம்செய்வதற்கு முதலில் நாரத்தை இலையை நன்கு கழுவி பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.அடுத்து துவரம் பருப்பை வேகவைத்து, அதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளவும்.பின்பு ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, கொத்தமல்லி, சீரகம், வர மிளகாய் ஆகியவற்றை போட்டு வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சு டானதும், அதில் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து, அதில் மசித்து வைத்துள்ள துவரம் பருப்பு, தக்காளி கலவையை ஊற்றி, அதனுடன் அரைத்து வைத்துள் பொடி மற்றும் புளிகரைசலை ஊற்றவும்.பின்பு அதனுடன் நறுக்கி வைத்துள்ள நாரத்தை இலை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கினால் மணமணக்கும் நாரத்தை இலை ரசம் ரெடி.

Categories

Tech |