Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

எலுமிச்சை தோலை தூக்கி வீசிடாதீங்க…” இது எவ்வளவு நன்மை இருக்கு தெரியுமா”..? கேட்டா அசந்துடுவிங்க..!!

எலுமிச்சை தோலில் எவ்வளவு நன்மை இருக்கு என்கின்றது பற்றி தெரியுமா? அதை நீங்கள் தெரிந்து கொண்டால் எலுமிச்சை தோலை தூக்கி எறிய மாட்டீர்கள்.

எலுமிச்சை ஊறுகாயை தவிர வேறு எந்த ஒரு பொருளுக்கும் எலுமிச்சை தோலை நாம் பயன்படுத்த மாட்டோம் . எலுமிச்சை சாற்றை காட்டிலும் தோலில் அதிக அளவு நன்மை உள்ளது. எலுமிச்சை சிட்ரஸ் நிறைந்த பழம். இதன் சாறை இணை பொருளாக பயன்படுத்துவோம். ஊறுகாயில் மட்டும் எலுமிச்சை தோளோடு பயன்படுத்துவோம். ஆய்வுகள் எலுமிச்சை தோல் பயோ ஆக்டிவ் சேர்மங்கள் நிறைந்துள்ளது என்று கூறுகின்றனர். இதில் அதிக ஊட்டச்சத்து உள்ளது.

ஒரு டீஸ்பூன் நறுக்கிய எலுமிச்சை துண்டுகள் 6 கிராம் அளவுக்கான ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியுள்ளது. வாய்வழி ஆரோக்கியத்தை ஆதரிக்க செய்யும். பல்குலி  மற்றும் ஈறு தொற்றுகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கக் கூடியது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எலுமிச்சை தோல் பல நன்மைகளை கொண்டுள்ளது. இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளது. இதனால் உடலில் சேதங்கள் உண்டாகாமல் தடுக்கின்றது. ஆய்வு ஒன்றில் எலுமிச்சை தோல் மற்றும் ஆரஞ்ச் தோலைக் காட்டிலும் வலுவான ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டை கொண்டுள்ளது என்று தீர்மானித்தது.

மேலும் இதில் வைட்டமின் சி சக்திவாய்ந்த நன்மைகள் உள்ளது .நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த எலுமிச்சை தோல் பயன்படுகின்றது. எலுமிச்சை தோல் சாறு சரும நோய்த்தொற்றுகளை உண்டாக்கும் மருந்து எதிர்ப்பு பூஞ்சைக்கு எதிராக செயல்பட்டது. எனினும் இது குறித்து கூடுதல் ஆய்வுகள் தேவை.

கேன்சரை உண்டாக்கும் செல்களை தடுகின்றது. எலுமிச்சை தோலில் இருக்கும் டி -லிமோனெனில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கலாம். குறிப்பாக வயிற்று புற்றுநோய்க்கு எதிரான தொடர்பை கொண்டிருக்கலாம்.

பித்தப்பையில் உள்ள கல்லைக் கரைக்க சிறந்த மாற்று மருந்தாக இது உள்ளது. இனி எலுமிச்சையை விட எலுமிச்சைத் தோலை ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொண்டால் உடல் நல பாதிப்பில் இருந்து விடுபடலாம். அளவாக எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் எலுமிச்சை பற்களில் அரிப்பு அல்லது வயிற்றில் அமிலத் தன்மையை உண்டாக்கும்.

Categories

Tech |