சிம்மம் ராசி அன்பர்கள்…!! இன்று எதிலும் பொறுமையுடன் யோசித்து செயல்படுவது நன்மை கொடுக்கும். இன்று காரியங்களில் அனுகூலம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வாழ்க்கைத்துணை உறவினர்களால் நன்மை ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை ஏற்படக்கூடும்.
கூடுமானவரை எதையும் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக நடந்து கொள்ளுங்கள். யாரிடம் இன்று பண கடன் மட்டும் வாங்காதீர்கள். இன்று நிதானமாக இருங்கள் மனம் கொஞ்சம் அலைபாய கூடும் தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது சிறப்பு கொடுப்பதாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை மேற்கு
அதிர்ஷ்ட எண் 5 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்