Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “அறிமுகமில்லாதவரிடம் அதிகம் பேசவேண்டாம்”… அளவுடன் பேசுவது நல்லது.!!

செய்யும் செயலை மிகவும் நேர்த்தியாக செய்யக்கூடிய சிம்மராசி அன்பர்களே..!! இன்று அறிமுகமில்லாத எவரிடமும் அதிகம் பேசவேண்டாம். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிபுரிவது அவசியம். பணவரவு எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவை மட்டும் தயவு செய்து உண்ண வேண்டாம் வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். இன்று இருந்த தடைகள் விலகி உங்களுக்கு எல்லா விஷயத்திலும் முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்கள்  உடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்களது பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது.

உங்கள் உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. மிகவும் முக்கியம் வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். இன்று அக்கம் பக்கத்தினரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். இன்று உங்களுக்கு மனதிற்கு பிடித்த பொருட்ளை வாங்கி மகிழும் வாய்ப்பு இருக்கும். எதுவாக இருந்தாலும் சரி இன்று தீப ஒளி  திருநாள் என்பதால் உங்களுடைய பிரச்சினைகள், துன்பங்கள் அனைத்தையும் தூக்கி போட்டுவிட்டு மனதார தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். உங்கள் மனதை மட்டும் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சி தானே வந்துவிடும். அதுபோலவே முடிந்தால் இன்று நீங்கள் வெள்ளை நிற ஆடையோ, வெள்ளை நிறத்தில் கை குட்டையையோ எடுத்து சொல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |