Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “எதிர்ப்புகள் விலகி செல்லும்”… விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள்..!!

தீர ஆலோசித்து காரியங்களை கவனமுடன் செய்யக்கூடிய சிம்மராசி அன்பர்களே..!! இன்று எடுத்த முயற்சிகளில் எளிதில் வெற்றி காணும் நாளாக இருக்கும். சந்தித்தவர்களால் சந்தோஷமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமாக நல்ல தகவல்கள் வந்துசேரும். இன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலனை கொடுக்கும். மற்றவர்களை மட்டும் தயவு செய்து அனுசரித்துச் செல்லுங்கள். எல்லா வகையிலுமே நல்லது நடக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகி செல்லும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். இன்று கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும்.

இன்று உறவினர் வகையிலும் உதவிகள் கிடைக்கும். இன்று அனைவரின் ஆதரவு பெற்று சிறப்பாக செயல்படுவீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும். விளையாட்டில் ஆர்வம் செல்லும். விளையாட்டு துறையில் நல்ல வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும். இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால்  அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும். தயவுசெய்து இதை நீங்கள் செய்து பாருங்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  கிழக்கு

அதிர்ஷ்ட திசை : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்

Categories

Tech |