Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “பயணத்தில் தடங்கல்கள் ஏற்படலாம்”… அடுத்தவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்..!!

அதிகாரப் பதவியும் தலைமை பண்பும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் கௌரவக் குறைவு ஏற்படா வண்ணம்  பார்த்துக்கொள்வது நல்லது. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை வேண்டும். பயணத்தில் தடங்கல்கள் கொஞ்சம் ஏற்படலாம். இன்று தேவையான நிதி உதவி கிடைக்க வாய்ப்பு ஏற்படும். பணி சுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். மேலிடத்திற்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு நல்லபடியாகவே இருக்கும். அடுத்தவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக செய்வது நன்மை கொடுக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.

தயவு செய்து ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். முக்கியமாக படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். அது போதும் சக மாணவரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். கூடுமானவரை நீங்கள் கலகலப்பாக  காணப்படுவீர்கள். நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |