அதீத சிந்தனையும் செயல்திறனும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று அறிமுகமில்லாத எவரிடமும் பொது விஷயத்தை பற்றி பேச வேண்டாம். திட்டமிட்ட பணிகளில் தகுந்த கவனம் கொள்வது நல்லது. தொழில் வியாபார நடைமுறை மந்த கதியில் இயங்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். காலமுறை உணவுப் பழக்கம் பின்பற்றுவதால் உடல் நலம் சீராகும். இன்று எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கப்பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள நேரிடும்.
இந்த விஷயத்தில் மட்டும் கவனமாக இருங்கள். அக்கம்பக்கத்தினரிடம் பேசும்போது கொஞ்சம் அளவாகப் பேசுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் ஓரளவு சிறப்பை பெறமுடியும். கொஞ்சம் கடுமையாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாகவே நடக்கும். அது போலவே இன்று காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்