Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “செல்வ நிலை இன்று உயரும்”… தன்னம்பிக்கை அதிகரிக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று வியாபாரத்தில் தன லாபம் அதிகரித்து உங்களுடைய செல்வ நிலை இன்று உயரும் நாளாக இருக்கும். எல்லா வகையிலுமே இன்று நீங்கள் நன்மைகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். கல்வியில் வெற்றி உண்டாகும். பிரிந்தவர்கள் கூடி பேரின்பம் காண்பார்கள். இன்று காரிய அனுகூலம் ஏற்படும். முக்கிய நபர்களின் உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற கடுமையாக உழைப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கப்பெற்று மனமும் சந்தோஷமாக இருக்கும். உடன்பிறந்தோருடன் உங்களுக்கு உறவுநிலை பலப்படும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.

வெற்றி வாய்ப்புகளை குவிக்க முடியும். கல்வியில் இன்று நீங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியை ஏற்படுத்திக்கொள்ள முடியும். அது போலவே இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அது போலவே தான் நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். கர்ம தோஷங்கள் நீங்கி மனமும் மகிழ்ச்சியாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |