சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று கவனிக்காது விட்ட உடல்நலத்தில் கவலை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். உடல் நலனை தயவு செய்து பாருங்கள். சரியான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் அலைச்சல்களை மட்டுமே சந்திக்க நேரிடும். பிள்ளைகளால் வந்த பிரச்சினை அகலும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு எதிர்ப்பு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். பணியில் மிகத் துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும்.
இன்று மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமாக படிக்கவேண்டும். படிப்பில் மட்டுமே கவனத்தைச் செலுத்த வேண்டும். அது போலவே இன்று நீங்கள் வெளியே செல்லும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இல்லையேல் கைக்குட்டையை வைத்து எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லை காலையில் நீங்கள் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கும். இதன் மூலம் நீங்கள் வெற்றி வாய்ப்புகளை பெற முடியும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6#
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்