Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “உங்களுடைய அந்தஸ்து உயரும்”… புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று அரசு வழியில் பல நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்க கூடும். பதவி உயர்வு கிடைப்பதன் மூலமாக உங்களுடைய அந்தஸ்து உயரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரக்கூடும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கடும் முயற்சிக்குப் பிறகு நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றியை கொடுக்கும். உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகக் கூடும். ஆகையால் உடல்நிலையில் மட்டும் கவனமாக இருங்கள்.

வயிற்று வலி போன்றவை இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். அது போலவே சகோதரரிடம் பேசும்பொழுது நிதானமாகப் பேசுங்கள். இன்று ஓரளவு சிறப்பை கொடுக்கும் நாளாக இருக்கும். இன்று வெளியிடங்களுக்கு செல்லும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாடு உங்களுடைய கர்ம தோஷங்களை நீக்கி செல்வ நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |