Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “வெளியூரில் இருந்து நல்ல தகவல்கள் வரும்”… காதலில் வயப்படுவீர்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் இஷ்ட தெய்வ அனுக்கிரகம் பெறுவீர்கள். வெகுநாள் மனதில் இருந்த சஞ்சலம் தீரும். அதிக உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பண பரிவர்த்தனை சீராகும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று ஆன்மீக செலவுகள் கொஞ்சம் ஏற்பட கூடும்.  காரியத்தில் இருந்த  தடை தாமதம் விலகிச் செல்லும். எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதலாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். அந்நிய மொழி பேசுபவர்களால் உதவிகள் கிடைக்கும். வெளியூரில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதுபோலவே பங்குச்சந்தை துறையில் உள்ளவர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். வசிக்கும் இடத்தின் மதிப்பும் மரியாதையும் கூடும். குடும்பத்தில் சகோதர வழியில் நன்மை உண்டாகும். எதையும் இன்று தைரியமாக செய்வீர்கள்.

வீடு தொடர்பான பணிகள் விரைந்து நடக்கும். உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும். உடல் நிலையில் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உடலில் வசீகரத் தன்மை கூடும். காதலில் வயப்பட கூடிய சூழல் இருக்கும். திருமணயோகம் இருக்கும். இன்றைய  நாள் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். அது வெற்றிகரமாக நடந்து முடியும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ  சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கும். செல்வ நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் :  சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |