சிம்மம் ராசி அன்பர்களே..!! உங்களுக்கு இடையூறு செய்பவரை அறிந்துகொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறு அளவில் போட்டிகள் இருக்கும். சராசரி அளவில் இன்று பணவரவும் கிடைக்கும். அரசு அனுகூலம் பெறுவதற்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். வாகனத்தில் செல்லும் பொழுது மித வேகமாக செல்லுங்கள். சரக்குகளை வாடிக்கையாளருக்கு அனுப்பும் போது கவனமாக அனுப்புங்கள். உத்தியோகத்தில் சரியாக முடிவெடுக்க முடியாமல் கொஞ்சம் குழப்பம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.
இன்று உடல் சோர்வாகக் காணப்படும். சக ஊழியர்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். குடும்பத்தினருடன் இணக்கமான போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். அதேபோல அக்கம்பக்கத்தினரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். திருமணத்திற்காக முயற்சி செய்தவர்களுக்கு இன்று நல்ல சூழல் இருக்கும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும்.
இருந்தாலும் இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சூரிய பகவானை மனதார நினைத்து இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்