Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி கூடும்”… எதிர்பாராத நல்ல திருப்பங்களை சந்திப்பீர்கள்..!!

எந்த  ஒரு விஷயத்திலும் ஆராய்ந்து பார்த்து அதற்கு ஏற்றார் போல் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி கூடும் நாளாக இருக்கும். உங்களுடைய உடன்பிறப்புகள் உங்கள் கருத்துக்களுக்கு ஒத்து வரக் கூடும். ஆதாயம் தரும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள். இழுபறியாக இருந்த வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். இன்று எதிர்பாராத நல்ல திருப்பங்களை சந்திக்க கூடும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறி செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.

மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். மரியாதை அந்தஸ்து உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். இன்று நீங்கள் மனம் மகிழ்வாக காணப்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று  முக்கியமான காரியத்தை மேற்கொள்ளும் போது முக்கியமான பணிகளை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைகுட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை வழிபட்டு தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |