Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “திட்டமிட்ட இலக்கு நிறைவேறும்”.. நல்ல செய்தி காதுக்கு சேரும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுடைய செயல்களில் திறமை வளரும். அலைச்சல் தந்த வேலை ஆதாயத்தைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். பெற்றோரின் தேவையை  அறிந்து நிறைவேற்றுவீர்கள். இன்று குடும்பத்தில் இருப்பவருடன் கருத்து மோதல்கள் மட்டும் கொஞ்சம் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் இன்று சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய கூடும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரியிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும். சம்பள உயர்வு போன்ற செய்திகள் உங்கள் காதுக்கு வந்து சேரும். அதுமட்டுமில்லாமல் வெளியூர் தகவல்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும். இன்று குடும்பத்தில் ஓரளவு நிம்மதி காணப்படும். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடுமையாக முயன்று தான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும்.

படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். அதுபோல இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் இளம் சிவப்பு நிறம்

Categories

Tech |