சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். எதையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். இன்று கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து செல்லும். சகோதரிகளிடம் கருத்து வேற்றுமை ஏற்படக்கூடும். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அடுத்தவரிடம் பேசும்பொழுது யாரைப்பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரவு தாமதமாகத்தான் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டியிருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மனம் நிம்மதியாக இருக்கும். மற்றவர்கள் உங்களுக்கு ஆறுதலாகவும் உறுதுணையாகவும் இருப்பார்கள். இன்றைய நாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மட்டும் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாகவே இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவன்ராத்திரி அதாவது குபேர கிரிவலம் என்று சொல்வார்கள். குபேரர் பூமிக்கு வந்து திரு.அண்ணாமலையாரை தரிசித்து விட்டு கிரிவலம் செல்லும் நாள்.
இந்த நாளில் குபேரருடன் நாமும் கிரிவலம் சென்றால் ஏழு தலைமுறைக்கு நமக்கு செல்வம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். ஆகையால் இந்த நாளை நாம் கூடுமானவரை கிரிவலம் செல்வது சிறப்பு. முடிந்தால் கிரிவலம் சென்று வாருங்கள். உங்களுடைய செல்வ நிலையை உயர்த்திக் கொள்ளுங்கள். அது மட்டுமில்லாமல் கிரிவலம் செல்ல முடியாதவர்கள் மாலை 4 மணியிலிருந்து 6: 30 மணிக்குள் குபேரரையும் திரு. அண்ணாமலையாரையும் தரிசியுங்கள். செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தயவு செய்து இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்