Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “தடுமாற்றம் கொஞ்சம் இருக்கும்”.. பொறுமையாகவே செயல்படுங்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! உங்கள் செயலில் தடுமாற்றம் கொஞ்சம் இருக்கும். நண்பரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணியை நிறைவேற்றுவீர்கள். இலாபத்திற்கு இன்று எந்த வித குறையும் இருக்காது. உணவு உண்பதில் மட்டும் கொஞ்சம் கட்டுப்பாடு வேண்டும். அது மட்டும் இல்லாமல் சரியான உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். பெண்கள் தயவு செய்து நகையை இரவல் கொடுக்க வேண்டாம். இன்று கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு கடுமையாக உழைப்பீர்கள்.

நன் மதிப்பையும் பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் மட்டும் ஏதேனும் டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும். உடல் சோர்வு கொஞ்சம் வரலாம். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான செலவுகள் கொஞ்சம் குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் இருக்கட்டும். கூடுமானவரை கொஞ்சம் பொறுமையாகவே செயல்படுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். சக மாணவரின் ஒத்துழைப்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள் உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |