Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “குடும்ப குழப்பம் விலகும்”.. எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் விலகி செல்லும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாளாக இருக்கும். இன்று எந்த ஒரு காரியமும் மந்தமாகத்தான் நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும் சுமாராகவே இருக்கும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவுகள் கூடும். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். பயணங்கள் ஓரளவு அலைச்சலை கொடுப்பதாக தான் இருக்கும். இன்று காரியங்களை செய்யும் பொழுது கொஞ்சம் பொறுமையாக செய்யுங்கள் அது போதும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சக மாணவரின் ஒத்துழைப்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்

Categories

Tech |