குடும்பத்திற்காக கடுமையாக உழைத்து பாடுபடும் சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று அன்னையின் ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை கொள்ளுங்கள். அதிக முயற்சி எடுத்து முன்னேற முயலுங்கள். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். நீர்நிலைகளில் மட்டும் கவனமுடன் செயல்படுங்கள். இன்று திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் சின்ன சின்ன தடை ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பாராத செலவுகள் இன்று இருக்கும். உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும் கவனமாக இருங்கள். எந்த விஷயம் செய்வதாக இருந்தாலும் மற்றவர்களை அனுசரித்து செய்யுங்கள்.
எதிலும் முழுக்கவனம் இருப்பது நல்லது. பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். வீண் அலைச்சலும் இருக்கும். ஆனால் மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். இன்று ஓரளவு சிறப்புமிக்க நாளாக இருக்கும். மிக முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியங்களை செய்யும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அணிந்து செல்லுங்கள். அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்