சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் பொறுப்பான செயலை மற்றவர்கள் விமர்சிக்கக் கூடும். சக தொழில் வியாபாரம் சார்ந்தவருடன் சச்சரவு ஏதும் பேச வேண்டாம். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல்கள் இருக்கும். பெண்கள் பண பொறுப்பை மட்டும் ஏற்க வேண்டாம். இன்று கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக செயல்படுங்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனையை செலுத்துவீர்கள். ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக நடக்கும்.
அதுமட்டுமில்லாமல் அயல்நாட்டிலிருந்து உங்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் மட்டும் நீங்கள் இன்று ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அது மட்டுமில்லாமல் மற்றவருடைய பணத்திற்கு இன்று நீங்கள் பொறுப்பு ஏற்க கூடிய சூழல் இருக்கும். இந்த விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள். கூடுமானவரை இன்று பொறுமையாகவும் நிதானமாகவும் காரியங்களைச் செய்யுங்கள்.
இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். கல்வியில் ஆர்வம் அதிகமாகவே இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். நீலநிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்யுஙகள், அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண்-: 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்